சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை


சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை
x
தினத்தந்தி 12 Aug 2021 10:42 PM IST (Updated: 12 Aug 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் ரூ.5 லட்சத்தில் சாலையில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி மற்றும் பூத்தாம்பட்டியில் ரூ.4 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் தாமரைச்செல்வி முருகன் தனது நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்தார். இதற்கான பூமி பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்.எல்.ஏ., எஸ்.காந்திராஜன் கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் தி.மு.க. நகர செயலாளர் கார்த்திகேயன், மாரம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரொசாரியோ, தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றிய அவைத்தலைவர் ஆரோன், ஒன்றிய துணைச்செயலாளர் நாகப்பன், ஒன்றிய பொருளாளர் கவிதாமுருகன், தி.மு.க. பிரமுகர்கள் வேடசந்தூர் டி.பெருமாள், பூத்தாம்பட்டி அருண்பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story