காவிரி ஆற்றில் மணல் திருடிய 2 பேர் கைது


காவிரி ஆற்றில் மணல் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2021 11:07 PM IST (Updated: 12 Aug 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்
கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றுப்பகுதியில் சிலர் லாரிகளில் மணல் திருடுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் போலீசார் 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். 
விசாரணையில், அவர்கள் புதுப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 31), மண்மங்கலத்தை சேர்ந்த கார்த்திக் (37) என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தப்பி ஓடிய லாரி உரிமையாளர் காமராஜ் மற்றும் சக்திவேல் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story