தி.மு.க.வின் தவறுகளை மறைக்க பா.ஜனதா மீது குற்றச்சாட்டு
தி.மு.க.வின் தவறுகளை மறைக்க பா.ஜனதா மீது குற்றச்சாட்டு வதாக அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் கூறினார்.
திண்டுக்கல்:
பா.ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் ராஜாமுகமது தலைமை தாங்கினார். பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் சையது இப்ராகிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜனதா அனைத்து மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. இதனால் கட்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து வருகின்றனர். அதை பொறுக்க முடியாமல் பா.ஜனதா நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மரபை மீறி எதிர்க்கட்சியினர் மோசமாக நடந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்படும் சோதனை தி.மு.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.
கொங்கு மண்டலத்தில் வெற்றிபெற்றவர்களை இழிவுபடுத்தவே சோதனை நடத்தப்படுகிறது. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ரேஷன்கார்டுக்கு ரூ.1,000 ஆயிரம், விலைவாசி குறைப்பு என பல வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை.
எனவே தி.மு.க. தனது தவறுகளை மறைக்க பா.ஜனதா மீது குற்றம்சாட்டுகிறது. தமிழகத்தின் மீதான கடனுக்கு 90 சதவீதம் தி.மு.க. தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story