இலங்கை அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு


இலங்கை அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 12 Aug 2021 11:11 PM IST (Updated: 12 Aug 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூர், ஆழியாறு பகுதியில் உள்ள முகாமில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குடியுரிமை கேட்டு இலங்கை அகதி கள் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி

கோட்டூர், ஆழியாறு பகுதியில் உள்ள முகாமில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குடியுரிமை கேட்டு இலங்கை அகதி கள் மனு கொடுத்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

அகதிகள் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர், ஆழியாறில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் அகதிகள் மறுவாழ்வு இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராமதிலகம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். 

மேலும் முகாமில் உள்ள அகதிகளிடம் குறைகளை அவர்கள் கேட்டறிந்தனர். அப்போது இலங்கை அகதிகள் தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் கூறினார்கள். அத்துடன் அதை மனுவாக எழுதியும் கொடுத்தனர். 

இந்திய குடியுரிமை 

ஆய்வின் போது ஆனைமலை தாசில்தார் விஜயகுமார், தனி தாசில்தார் மகேஷ்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் ராமராஜ், மண்டல துணை தாசில்தார் வாசுதேவன், வருவாய் ஆய்வாளர் நுர்முகமது, முகாம் தனி வருவாய் ஆய்வாளர்கள் சிவ சண்முகம், மணிவண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இது குறித்து அகதிகள் முகாமில் உள்ளவர்கள் கூறியதாவது:- 
முகாமில் உள்ள வீடுகள் பழுதடைந்து உள்ளது. எனவே வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். மேலும் வீடு இல்லாதவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். குடிநீர், கழிப்பிடம், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.

நலத்திட்ட உதவிகள் 

மேலும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் முகாமில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க வேண்டும். இலங்கையில் இருந்து பாஸ்போர்ட்டு உடன் வந்தவர்கள் தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story