ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்


ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள்  தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2021 11:27 PM IST (Updated: 12 Aug 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் 100 நாள் வேலை வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி

தர்ணா போராட்டம்

ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் அரசு ஒதுக்கிய நேரப்படி வேலை வழங்கவில்லை எனக்கூறி ஆரணியில் உள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சபிதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் ஆகியோர், சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர் திலகவதி மற்றும் சிலரை தனது அறைக்கு வரவழைத்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்று விவரங்களை கேட்டறிந்தார். 

சுழற்சி முறையில்

அப்போது பணித்தள பொறுப்பாளர், ஊராட்சி செயலாளரையும் போனில் தொடர்பு கொண்டு பேசினா். பின்னர் கொரோனா தொற்று பரவல் காரணமாக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்க வில்லை.  தற்போது 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இனி உங்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்கப்படும். 1 முதல் 100 வரை, 101 முதல் 200 வரை, 201 முதல் 300 வரை என வரிசைப்படி பணிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story