மத்திய விரைவு அதிரடி படையினர் திருவண்ணாமலையில் முகாம்
கலவரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய திருவண்ணாமலையில் மத்திய விரைவு அதிரடி படையினர் முகாமிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை
அதிரடி படையினர்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய விரைவு அதிரடிப்படை செயல்பட்டு வருகிறது. இந்தப் படையினர் மதம் தொடர்பான கலவரங்கள், அரசியல் தொடர்பான கலவரங்களை கட்டுப்படுத்துவதும், தீவிரவாதத்தைத் தடுப்பதும் இவர்களின் பணியாகும்.
இந்தப் படையினர் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அங்குள்ள பதற்றமான இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் எப்போதாவது அந்த இடங்களில் கலவரம் ஏற்பட்டால் அவர்களால் எளிதாக அவற்றை கட்டுப்படுத்த முடியும்.
30 பேர் வருகை
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 30 பேர் கொண்ட விரைவு அதிரடிப்படையினர் வந்துள்ளனர். அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதற்றமான போலீஸ் நிலைய பகுதிகள் மற்றும் மதத் தொடர்பான இடங்கள், கடந்த காலங்களில் கலவரங்கள் ஏற்பட்ட இடங்களை கண்டறிந்துள்ளனர்.
அந்த இடங்களுக்கு அவர்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்தப் பணி ஓரிரு வாரங்கள் நடக்கும், என அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story