மளிகை கடைகளில் 145 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
145 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
மணமேல்குடி:
மணமேல்குடி அடுத்த கட்டுமாவடி கடைவீதியில் உள்ள மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் புதுக்கோட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் வீரபாண்டியன், செந்தில்குமார் கொண்ட தனிப்படையினர் கட்டுமாவடி கடைவீதியில் உள்ள மளிகை கடைகளில் திடீர் சோதனையிட்டனர். அப்போது முகமது ரியாஸ் என்பவரது மளிகைக்கடையில் 111 கிலோ புகையிலை பொருட்களும், ஷாஜஹான் மளிகைக்கடையில் 34 கிலோ புகையிலை பொருட்களும் என 145 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story