உதவி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு
ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேரன்மாதேவி:
ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயன்ற முதியவர்
நெல்லை மாவட்டம் அம்பை அருகே சிவந்திபுரம் ஆறுமுகம்பட்டியைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் (வயது 80). இவர் நேற்று சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு பிளாஸ்டிக் கேனில் மண்எண்ணெயுடன் வந்தார். அவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று, அல்போன்சிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.
ஆக்கிரமிப்பை அகற்ற...
அப்போது அல்போன்ஸ் கூறுகையில், ‘ஆறுமுகம்பட்டியில் பொதுப்பாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். இதற்காக கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றார்.
பின்னர் இதுதொடர்பாக அல்போன்ஸ், உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினார். பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கடந்த சில நாட்களுக்கு முன்பும் அல்போன்ஸ் சேரன்மாதேவி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story