குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2021 12:02 AM IST (Updated: 13 Aug 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளபாண்டி மகன் மணி என்ற பேட்டை மணி (வயது 38). இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதேபோல் நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் இந்திரா நகரை சேர்ந்த கணேசன் மகன் அஜித்குமார் (27). இவர் கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார்.

இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு இந்த பரிந்துரையை ஏற்று 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்.
இதையடுத்து களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை ஆகியோர்  மணி மற்றும் அஜித்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story