தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது


தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2021 12:38 AM IST (Updated: 13 Aug 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள கரையிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது 60). கட்டிட தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் (41) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சைக்கிளில் சென்ற முருகனை, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் காயமடைந்த முருகன் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், ராமையன்பட்டியை சேர்ந்த எட்வர்டு (23), ரூபன் (24), சதீஷ்குமார் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story