விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 13 Aug 2021 12:38 AM IST (Updated: 13 Aug 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 60). இவர் தனது மகன் சுரேஷ்குமார் (27) மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நீண்ட காலமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையான வரதராஜை குடும்பத்தினர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த வரதராஜ் சம்பவத்தன்று வீட்டிற்கு வரும் போதே பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரிய வந்த அவரது குடும்பத்தினர் வரதராஜை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரதராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சுரேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story