நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு
நெல்லையில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை மகாராஜநகர் கல்யாணி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மனைவி உமா (வயது 61). இவர் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள மெயின் ரோட்டில் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
அவர்கள் திடீரென்று உமாவை கீழே தள்ளி விட்டு அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story