பெரியகுளம் கண்மாயில் குறைந்து வரும் தண்ணீர்


பெரியகுளம் கண்மாயில் குறைந்து வரும் தண்ணீர்
x
தினத்தந்தி 13 Aug 2021 12:43 AM IST (Updated: 13 Aug 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அருகே பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
பெரியகுளம் கண்மாய் 
வத்திராயிருப்பு அருகே  பெரியகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல், தென்னை உள்ளிட்ட விவசாயங்களை செய்து வருகின்றனர்.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கண்மாய்களில் போதுமான தண்ணீர் இருந்ததால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தொடர்ச்சியாக நெல் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வந்தனர். 
குறைந்து வரும் தண்ணீர் 
தற்போது இந்த பெரிய குளம் கண்மாயில் இருந்து தண்ணீர் வேகமாக குறைந்து வருவதால் கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
வத்திராயிருப்பு பகுதியில் உள்ள கண்மாயில் மிகவும் பெரியது பெரியகுளம் கண்மாய். இந்த கண்மாயை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் கடுமையான வெயில் அடிப்பதாலும், மழை இல்லாததாலும் இந்த கண்மாயில் உள்ள தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. 
 விவசாயிகள் முதல்போக நெல் சாகுபடிக்கு தங்களது நிலங்களை தயார் படுத்தி வரும் நிலையில் கண்மாயில் உள்ள குறைந்த தண்ணீரை வைத்து நெல் நாற்றாங்கால் பாவும் பணியினை தொடங்க இருக்கிறோம். அதற்குள் மழைபெய்தால் நெல் நடவு செய்யும் பணியை சிரமம் இன்றி மேற்கொள்ள முடியும். 

Next Story