சொக்கநாதர் சாமி கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா

சொக்கநாதர் சாமி கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா
x
தினத்தந்தி 13 Aug 2021 12:45 AM IST (Updated: 13 Aug 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் சொக்கநாதர் சாமி கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர், 
விருதுநகர் சொக்கநாதர் சாமி கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
பிரம்மோற்சவ விழா 
விருதுநகர் சொக்கநாதர் சாமி கோவிலில் நேற்று ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 திருவிழாவையொட்டி தினசரி பல்வேறு மண்டகப்படிகளின் சார்பில் கோவில் உள்புறம் உற்சவரின் திருவீதி உலா நடைபெறும்.
திருக்கல்யாணம் 
விழாவையொட்டி வருகிற 18-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.  இதனை தொடர்ந்து  23-ந் தேதியுடன் இத்திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரம்மோற்சவ கட்டளை நிர்வாக அறங்காவலர் செய்துள்ளார்.

Next Story