கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 16 பேர் உயிர் தப்பினர்


கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து  16 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 13 Aug 2021 12:50 AM IST (Updated: 13 Aug 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 16 பேர் உயிர் தப்பினர்

சேந்தமங்கலம்:
சென்னையில் உள்ள கொளத்தூர் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த 60 பேர் 4 சுற்றுலா வேன்களில் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். அங்கு அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிபார்த்து விட்டு நேற்று மதியம் மலையில் இருந்து அடிவாரத்திற்கு இறங்கி கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு சுற்றுலா வேன் 52-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 51-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அந்த பகுதியில் மழை பெய்ததால் சாலையில் சறுக்கிய அந்த வேன் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. 
அந்த வேனை ஓட்டி வந்த சென்னை பெரிய தோப்பு மணலி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 41) மற்றும் வேனில் வந்த 15 பேர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர். வேன் கவிழ்ந்த தகவல் அப்பகுதியில் பரவியது. அதைத்தொடர்ந்து மாற்று வாகனம் மூலம் அவர்கள் அனைவரும் சேந்தமங்கலம் மற்றும் நாமக்கல் பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
==========

Next Story