கார்குடி அரசு பள்ளியில் கிருமி நாசினி தெளிப்பு
கார்குடி அரசு பள்ளியில் கிருமி நாசினி தெளிப்பு
கூடலூர்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆனால் ஆசிரியர்கள் தினமும் வந்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி செல்லா மற்றும் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். பின்னர் முதுமலை ஊராட்சி சார்பில் சுகாதார பணியாளர்கள் பள்ளிக்கூடத்தில் கிருமி நாசினி தெளித்தனர். தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.
Related Tags :
Next Story