பச்சை தேயிலை விலை நிர்ணயம்
பச்சை தேயிலை விலை நிர்ணயம்
மஞ்சூர்
கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14 விலை நிர்ணயம் செய்து இன்கோசர்வ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பச்சை தேயிலை விவசாயம்
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக பச்சை தேயிலை விவசாயம் உள்ளது. இதனை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் தமிழக தொழில் கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான 16 தொழிற்சாலைகளுக்கும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருமானம் ஈட்டி வருகின்றனர். அதன்படி விவசாயிகள் வினியோகிக்கும் பச்சை தேயிலைக்கு பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளில் மாதாந்திர விலை நிர்ணயமும், கட்டபெட்டு கூட்டுறவு தொழிற்சாலையில் மட்டும் வாரந்திர விலை நிர்ணயமும் செய்யப்படுகிறது.
விலை நிர்ணயம்
இந்த விலை நிர்ணயம், முந்தைய மாத ஏலத்தில் விற்பனையான தேயிலைத்தூள் விலையை அடிப்படையாக கொண்டு தொழிற்சாலை மேலாண்மை இயக்குனர்கள் முன்னிலையில் இன்கோசர்வ் நிர்வாகம் செய்யப்படுகிறது. அதன்படி இந்த மாத மாதாந்திர விலை நிர்ணயம் குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கைக்காட்டி, கரும்பாலம் ஆகிய தொழிற்சாலைகளில் 1 கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.15, குந்தா, மஞ்சூர், பிக்கட்டி, மேற்குநாடு, இத்தலார், மகாலிங்கா, நஞ்சநாடு, கிண்ணக்கொரை, எப்பநாடு, பிதிர்காடு, சாலீஸ்பரி, பிராண்டியர், பந்தலூர் ஆகிய தொழிற்சாலைகளில் 1 கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.14 என விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story