சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது
x
தினத்தந்தி 13 Aug 2021 12:55 AM IST (Updated: 13 Aug 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெபக்கூட்டம் நடத்தச்சென்ற போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெபக்கூட்டம் நடத்தச்சென்ற போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். 
பாதிரியார்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் நேருஜி நகரை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 41). இவர் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். 
இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு வீட்டுக்கு ஜெபக்கூட்டம் நடத்தச் சென்றார். அப்போது அந்த வீட்டில் இருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 
போக்சோவில் கைது 
இதுகுறித்து அந்த சிறுமி தன்னுடைய தாயாரிடம் கூறி இருக்கிறார். பின்னர் இதுதொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரை வழக்குப்பதிவு செய்தார். பாதிரியார் கிறிஸ்துதாஸ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story