பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில் ஆசிரியர்கள் செங்குட்டுவன், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செல்லதுரை, ஹேமலதா, மணிமாறன், கவிதா ஆகியோர் அடங்கிய குழுவானது, ஆசிரியர் பயிற்றுனர் அன்பரசன் வழிகாட்டுதலின்படி புதுச்சாவடி ராஜகம்பள தெருவில் பள்ளி செல்லா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுவாக ராஜகம்பள சமூக மக்கள் கைரேகை, ஜோசியம், குறி சொல்லுதல் ஆகிய குலதெய்வ தொழிலுக்காக வெளியூர் செல்வதால் அவர்களது பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்களை உயர்கல்வி பெற அருகில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேரவும் அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story