சுதந்திர தினவிழாவையொட்டி திருச்சியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை


சுதந்திர தினவிழாவையொட்டி திருச்சியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 13 Aug 2021 2:21 AM IST (Updated: 13 Aug 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினவிழாவையொட்டி திருச்சியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.


கே.கே.நகர், 
சுதந்திர தினவிழாவையொட்டி திருச்சியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சுதந்திர தினவிழா

இந்திய சுதந்திர தினவிழா நாடு முழுவதும் நாளை மறுநாள் (15-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவது வழக்கம். தொடர்ந்து போலீஸ் அணிவகுப்பும் நடைபெறும்.
இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி, போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுப்பட்டனர். திருச்சி சுப்பிரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இதற்கான அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

அணிவகுப்பு ஒத்திகை

காவல்துறை அதிகாரி ஒருவர் கம்பீரமாக நிற்க, அவர் முன்பு மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். சுதந்திர தினத்தன்று (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டு அதன் பின்னர் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்.  தொடர்ந்து சிறப்பான சேவை செய்த அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. தியாகிகள் மட்டும் வரவழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக காவல்துறையினரின் அணிவகுப்பு மட்டுமே நடந்தது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டும் பள்ளிகள் திறக்கப்படாததால் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. அதேபோல சுதந்திர தினத்தன்று நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டங்களும் நடைபெறாது.

Next Story