கேரளாவுக்கு கடத்திய 400 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்
காய்கறி மூட்டைகளுக்குள் மறைத்து வைத்து, சிவமொக்காவில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 400 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவமொக்கா: காய்கறி மூட்டைகளுக்குள் மறைத்து வைத்து, சிவமொக்காவில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 400 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா ஆகும்பேயில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. அந்த வேனை தடுத்து நிறுத்திய போலீசார் வேனிற்குள் சோதனை நடத்தினர்.
அப்போது வேனில் காய்கறி மூட்டைகள் இருந்தன. ஆனாலும் வேனில் இருந்த 3 பேரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் காய்கறி மூட்டைகளை வேனில் இருந்து இறக்கி அதை பிரித்து பார்த்தனர். அப்போது காய்கறி மூட்டைகளுக்குள் மாட்டிறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மாட்டிறைச்சி பறிமுதல்
அப்போது 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனால் சுதாரித்து கொண்ட போலீசார் 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி சென்றார். பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மங்களூருவை சேர்ந்த ஈபான், முகமது என்பதும், 3 பேரும் சிவமொக்காவில் இருந்து மங்களூரு வழியாக கேரளாவுக்கு மாட்டிறைச்சி கடத்தி சென்றதும் தெரிந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் 400 கிலோ மாட்டிறைச்சி, சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேர் மீதும் ஆகும்பே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story