தனியார் நிதிநிறுவனத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு


தனியார் நிதிநிறுவனத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Aug 2021 4:22 AM IST (Updated: 13 Aug 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

அடகு வைத்த 52 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை

அடகு வைத்த 52 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

52 பவுன் நகை

கோவை நீலாம்பூரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 64). இவர் தனது, 52½ பவுன் தங்க நகைகளை கடந்த, 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.9 லட்சத்திற்கு அடகு வைத்தார். 
அடகு வைத்து 2 மாதங்களுக்கு பிறகு வட்டி கட்டுமாறு நிறுவனத்தினர் அறிவுறுத்தினர். 

இதையடுத்து அவர் 2 மாதங்கள் வட்டி செலுத்தினார். பின்னர் அவருக்கு உடல் நலக்குறைவால் வட்டி செலுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நிதிநிறுவனத்தினர், துரைசாமியிடம் ஒரு சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர்.

5 பேர் மீது வழக்கு

இந்த நிலையில், துரைசாமி அடகு வைத்த நகைகளை திருப்ப வந்தார். அப்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது நிறுவனம் செயல்படவில்லை எனவும், ஊரடங்கிற்கு பின் நகைகளை பெற்று கொள்ளலாம் எனவும் நிதி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் நகைகளை திருப்ப சென்றார். ஆனால் நிதி நிறுவனத்தினர் நகைகளை திருப்பி தரவில்லை. இதனால் தன்னை ஏமாற்றி நகைகளை மோசடி செய்தது துரைசாமிக்கு தெரியவந்தது. 
இதுகுறித்து, துரைசாமி சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார்.

 இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அடகு வைத்த நகைகளை மோசடி செய்ததாக தனியார் நிதிநிறுவனத்தை சேர்ந்த வித்யா, ஜாஸ்மின், பார்த்தசாரதி, திவாகரன், கிருஷ்ணபிரபு ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story