பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 13 Aug 2021 4:22 AM IST (Updated: 13 Aug 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11,586 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களில் 11,258 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 103 பேரில் 16 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், சிலர் தங்களது வீடுகளிலும் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.
 மேலும் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 225 பேர் பலியாகி உள்ளனர். இந்த மாவட்டத்தில் சமீப நாட்களாக கொரோனா உயிரிழப்பு இல்லை.

Next Story