மாவட்டத்தில் மேலும் 94 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 85 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 94 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 28 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 52 பேரும், ஆத்தூர் பகுதியில் 9 பேரும், நகராட்சி பகுதிகளில் 4 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். மேலும் சென்னையில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 93 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 844 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி அரசு மற்றும்தனியார் ஆஸ்பத்திரிகளில் இறந்தனர்
இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,602 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story