கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; தொழிலாளி பலி


கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 13 Aug 2021 11:14 AM IST (Updated: 13 Aug 2021 11:14 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி, 

கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் அருகே உள்ள வல்லம்பேடு குப்பத்தை சேர்ந்தவர் தேசிங்கு (வயது 38). கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் தேசிங்கு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பெத்திக்குப்பம் அருகே அதே திசையில் வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.

இதில் தலைநசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story