5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான 1 லட்சம் ‘நிமோனியா’ ஊசி மருந்து சென்னை வந்தது


5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான 1 லட்சம் ‘நிமோனியா’ ஊசி மருந்து சென்னை வந்தது
x
தினத்தந்தி 13 Aug 2021 1:46 PM IST (Updated: 13 Aug 2021 1:46 PM IST)
t-max-icont-min-icon

புனேவில் இருந்து விமானம் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான 1 லட்சம் ‘நிமோனியா’ ஊசி மருந்து சென்னை வந்தது.

ஆலந்தூர், 

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல், நிமோனியா போன்ற நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க ‘நிமோகோகல்’ ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. இதற்காக தமிழக அரசு ‘நிமோகோகல்’ மருந்தை கொள்முதல் செய்து வருகிறது.

தமிழக அரசுக்காக புனேவில் இருந்து விமானம் மூலம் 20 பெட்டிகளில் 1 லட்சம் ‘நிமோகோகல்’ மருந்து சென்னை வந்தது. பின்னர் இந்த மருந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில மருத்துவ கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story