மேல்மருவத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
மேல்மருவத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் பின்புறம் முனீஸ்வரன் கோவில் உள்ளது. அங்குள்ள கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் சிதறி கிடப்பதாக பக்தர்கள் கோவில் குருக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் மேல்மருத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரித்தார்.
விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார். விசாரணையில் அவர் அச்சரப்பாக்கம் அடுத்த எலப்பாக்கம் அருகே உள்ள ஈச்சங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது.
உண்டியலை உடைத்து பணம் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.18 ஆயிரத்தை கைப்பற்றினர்.
Related Tags :
Next Story