காஞ்சீபுரம் அருகே தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2021 3:04 PM IST (Updated: 13 Aug 2021 3:04 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கங்கா தரப்பா. இவர் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில், மர்ம நபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 4½ பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.

இது குறித்து கங்கா தரப்பா காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் காஞ்சீபுரத்தை அடுத்த ராஜகுளம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் மிரள, மிரள விழித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் திடீர் குப்பத்தை சேர்ந்த உதயகுமார் என்ற உதயா (வயது 26), சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த விக்னேஸ்வரன் (21) என்பதும், சென்னை ராயப்பேட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும், பெரியார் நகர் பகுதியில் கங்காதரப்பா என்பவரின் வீட்டில் திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்த அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4½ பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், திருடிய மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story