பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் 2201 2022ம் ஆண்டுக்கான 6 முதல் 19 வயதுடைய பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி வெள்ளகோவில் ஒன்றியத்திற்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 2021 ஆகஸ்ட் 10 ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ம் தேதி வரை நடைபெறுகிறது.இப்பணியில் வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என பலர் ஈடுபட்டுள்ளனர், வீடு வீடாகவும் தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், உணவகங்கள் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு பணிபுரியும் வேறு மாவட்டங்களிலிருந்தும், வேறு மாநிலங்களிலிருந்தும் வருகை புரிந்துள்ள அனைவரையும் கணக்கெடுத்து அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதற்கான கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும் படி வெள்ளகோவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு விமலா எஸ்தர் ராணி கேட்டுக்கொண்டுள்ளார்.
---
Image1 File Name : 5638941.jpg
---
Image2 File Name : 5638942.jpg
----
Reporter : R. Selvaraj Location : Tirupur - Dharapuram - Vellakoil
Related Tags :
Next Story