பலத்த போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்து அனுப்பி வைக்கிறார்கள்.
திருப்பூர்
சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்து அனுப்பி வைக்கிறார்கள்.
ரெயில் நிலையத்தில் சோதனை
சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமைகொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா நாளை காலை திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. கலெக்டர் வினீத் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். கொரோனா காரணமாக மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. தியாகிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று கவுரவிக்கப்பட உள்ளது. கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளர்கள் கரவுரவிக்கப்படுகிறார்கள்.
சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரெயில்வே போலீசார், வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் பயணிகளின் உடமைகளை சோதனை செய்து அதன்பிறகே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கிறார்கள். அதுபோல் பார்சல் பண்டல்களையும் போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். 24 மணி நேரமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஷிப்ட்டுக்கு ஒரு சப்இன்ஸ்பெக்டர் தலைமையில் 8 போலீசார் கொண்ட குழு பயணிகளின் உடமைகளை சோதனை செய்கிறார்கள். இவர்களுடன் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் மாநகர் முழுவதும் இன்று சனிக்கிழமை முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள், மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், தலைவர்களின் சிலைகள் உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விடுதிகள், லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை மேற்கொள்கிறார்கள். அதுபோல் ரெயில் தண்டவாள பாதை ரோந்துப்பணியையும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
சுதந்திர தின விழா நடைபெறும் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானம், மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். போலீசாருடன் ஊர்க்காவல்டையினரும் இணைந்து பணியாற்றுகிறார்கள். மாநகரம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
Related Tags :
Next Story