வெண்குன்றத்தில் கோவில் கோபுரத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள். கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.


வெண்குன்றத்தில் கோவில் கோபுரத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள். கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.
x
தினத்தந்தி 13 Aug 2021 6:02 PM IST (Updated: 13 Aug 2021 6:02 PM IST)
t-max-icont-min-icon

வெண்குன்றத்தில் கோவில் கோபுரத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசி

கோபுரத்தை சேதப்படுத்தினர் 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வெண்குன்றத்தில் 1,400 அடி உயரை மலையில் பழமைவாய்ந்த தவளகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா நடைபெறுவது வழக்கம். கோவிலில் தவளகிரீஸ்வரர் மற்றும் விநாயகர் சன்னதியில் தனித்தனி கோபுரம் உள்ளன. 

கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு தவளகிரீஸ்வரர் சன்னதியில் உள்ள கோபுரத்தை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தினர். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
சாலைமறியல்

இந்த நிலையில் நேற்று மர்மநபர்கள் மலையின் மீது உள்ள விநாயகர் சன்னதி கோபுரத்தை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை கண்டித்து பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் வந்தவாசி -காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்ததும் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  கோபுரத்தை இடித்த நபர்கள் மீது 3 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story