போலீசார் சாலை விதிகளை மதித்த நடக்க வேண்டும் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தல்


போலீசார் சாலை விதிகளை மதித்த நடக்க வேண்டும் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 13 Aug 2021 6:35 PM IST (Updated: 13 Aug 2021 6:35 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறையில் மொத்தம் 125 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது, 4 சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை சிறந்த முறையில் பராமரித்த போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டி பரிசு வழங்கினார்.
மேலும் ஆய்வின்போது, 4 சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். போலீசார் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எந்தவித விபத்தும் ஏற்படாதவாறு வாகனம் ஓட்ட வேண்டும் என்று கூறினார்.
அப்போது, ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ்குமார், பவித்ரா, ஷாமளாதேவி, மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வக்குமார், அந்தோணி ராபின்ஸ்டன் கென்னடி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story