கம்பம் போக்குவரத்து சிக்னல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை
கம்பம் ேபாக்குவரத்து சிக்னல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
கம்பம்:
கம்பம் நகரின் மையப்பகுதியாக ஓடைக்கரைத்தெரு சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் செயல்படுகிறது. தேனியில் இருந்து குமுளி மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் கம்பம் பழைய பஸ் நிலையம் வழியாக போக்குவரத்து சிக்னலை வந்தடைகின்றன. இதேபோல் குமுளியில் இருந்து கம்பம் புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்களும் போக்குவரத்து சிக்னலை வந்தடைகின்றன. இதனால் அப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்நிலையில் போக்குவரத்து சிக்னல் அருகே அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்துவதால் அப்பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து கம்பம் போக்குவரத்து சிக்னல் பகுதியில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தடைவிதித்துள்ளார். இதுகுறித்து அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வ.உ.சி திடல், காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story