கூடலூரில் பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கூடலூரில் பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2021 6:42 PM IST (Updated: 13 Aug 2021 6:42 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூடலூர்:
கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கம்பம் ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். கூடலூர் நகர செயலாளர் ராஜீவ் முன்னிலை வகித்தார். 
இதில் முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்தும், காவிரி ஆற்றுக்கு குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும், லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு மாற்று திட்டத்தை செயல்படுத்த மாநில அரசை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூடலூர் விவசாய சங்கம் சார்பில் ரமேஷ்பாபு, ஜெகன், கொடியரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story