28 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசி
மேலும் 28 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசி
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ந் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வந்தது. முதலில் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டாத பொதுமக்கள், தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வின் காரணமாக தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் திருப்பூர் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால், தடுப்பூசி கூடுதலாக கேட்டு பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதற்கிடையே தடுப்பூசி இல்லாத காரணத்தினால் கடந்த 2 நாட்களாக மாநகரில் தடுப்பூசி செலுத்தவில்லை. தற்போது சென்னையில் இருந்து திருப்பூருக்கு 28 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-------
Related Tags :
Next Story