போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
கோவை
வ.உ.சி. மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர தினவிழா நடைபெறுகிறது. இதையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. ரெயில் மற்றும் விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கோவை வ.உ.சி. மைதானத்தில் நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் கலெக்டர் சமீரன் தேசிய கொடியேற்றுகிறார்.
பின்னர் அவர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
கொரோனா காரணமாக வ.உ.சி. மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே வ.உ.சி. மைதானம் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
அணிவகுப்பு ஒத்திகை
அத்துடன் கோவை ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
சுதந்திர தின விழாவையொட்டி கோவை மாநகரில் 1,500 போலீசா ரும், புறநகர் பகுதியில் 900 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை வ.உ.சி. மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story