விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கொடைக்கானல் அருகே விஷம் குடித்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே மன்னவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கவுஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 48). விவசாயி. இவர் தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.
ஆனால் அவருக்கு வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சங்கர், நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் விஷத்தை குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் இறந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story