ஓடும் பஸ்சில் பெண் அதிகாரியிடம் மர்மநபர் நகையை பறித்துச் சென்றார்.


ஓடும் பஸ்சில் பெண் அதிகாரியிடம் மர்மநபர் நகையை பறித்துச் சென்றார்.
x
தினத்தந்தி 13 Aug 2021 9:34 PM IST (Updated: 13 Aug 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் பெண் அதிகாரியிடம் நகையை மர்மநபர் பறித்தார்.

பேட்டை:
விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த அகஸ்தியர்பட்டி தாமரை தெருவைச் சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மனைவி ரோஸ்மேரி (வயது 52). இவர் பாப்பாக்குடி யூனியனில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக உள்ளார். சம்பவத்தன்று இவர் அகஸ்தியர்பட்டியில் இருந்து நெல்லைக்கு சென்ற அரசு பஸ்சில் ஏறினார். பழவூர் வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச்சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் வந்தபோது மர்மநபர் தங்கச்சங்கிலியை நைசாக பறித்து சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து ரோஸ்மேரி சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து, பெண் அதிகாரியிடம் நகையை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story