கிணற்றுக்குள் இறங்கும்போது கயிறு அறுந்து தொழிலாளி சாவு


கிணற்றுக்குள் இறங்கும்போது கயிறு அறுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 13 Aug 2021 9:47 PM IST (Updated: 13 Aug 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே கிணற்றுக்குள் இறங்கும்போது கயிறு அறுந்தால் உள்ளே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

சங்கராபுரம்

தொழிலாளி

சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பாண்டியன்(வயது 42). கிணறு வெட்டும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று விரியூரில் கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். 
அப்போது சக தொழிலாளர்கள் உதவியுடன் பாண்டியன் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்துவிட்டது. இதனால் 40 அடி உயரத்தில் இருந்து கிணற்றுக்குள் விழுந்து படுகாயம் அடைந்த பாண்டியன் வலி தாங்க முடியாமல் அலறினார். 

பரிதாப சாவு

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பினனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாண்டியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 
இது குறித்து அவரது உறவினர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த பாண்டியனுக்கு பிச்சைக்காரிச்சி(37) என்ற மனைவியும், அமுதா(17) என்ற மகளும், சிவா(12) என்ற மகனும் உள்ளனர்.


Next Story