வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு
கொரோனா தொற்று அதிகரிப்பு
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு 20-க்கும் குறைவாக காணப்பட்டது. கடந்த சில நாட்களாக 30-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று உறுதியாகி வந்தது.
இந்த நிலையில் நேற்றைய கொரோனா பரிசோதனையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 44 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவினால் 48,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46,973 பேர் குணமடைந்துள்ளனர். 1,098 பேர் பலியாகி உள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story