பஸ் சக்கரத்தில் சிக்கி மலபார் அணில் சாவு
பஸ் சக்கரத்தில் சிக்கி மலபார் அணில் சாவு.
குன்னூர்,
குன்னூரில் முக்கிய சுற்றுலா தலமாக தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான சிம்ஸ் பூங்கா உள்ளது. இங்கு மலபார் அணில் தனது 2 குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது. இதில் தாய் அணில், சிம்ஸ் பூங்கா வளாகத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் சகஜமாக பழகி வந்தது. மேலும் வியாபாரிகளிடம் வந்து, அவர்கள் கொடுக்கும் பழங்களை வாங்கி சாப்பிட்டு செல்வது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று தாய் அணில் சிம்ஸ் பூங்காவில் இருந்து வெளியேறி பூங்காவிற்கு முன்புறம் உள்ள குன்னூர்-கோத்தகிரி சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், அணில் உடலை எடுத்து சென்றனர். இந்த சம்பவம் வியாபாரிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story