உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம். கலெக்டர் ஓடினார்


உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம். கலெக்டர் ஓடினார்
x
தினத்தந்தி 13 Aug 2021 11:22 PM IST (Updated: 13 Aug 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம்

வேலூர்

வேலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா, விளையாட்டுத்துறை, நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது. விழிப்புணர்வு ஓட்டத்தை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேலூர் கோட்டை காந்தி சிலை முன்பு தொடங்கிய ஓட்டம் மக்கான் சந்திப்பு, வடக்கு போலீஸ் நிலையம், பழைய மீன் மார்க்கெட் சிக்னல் வழியாக மீண்டும் கோட்டை காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது.

இதில், கலெக்டர் குமாரவேல்பாண்டியன், வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், தாசில்தார் செந்தில், கலெக்டர் அலுவலக பொதுமேலாளர் பாலாஜி, நேரு யுவகேந்திரா அலுவலர் பிரேம் பரத்குமார், விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் மற்றும் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர்.
வேலூர் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 கிராமங்களில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம் அக்டோபர் மாதம் 2-ந் தேதிக்குள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story