வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மாயம்
காரைக்குடி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காலம் என்பதால் வீட்டில் இருந்த சிறுமிக்கு ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்தனர். அதன் மூலம் அந்த சிறுமி எப்போதும் யாருடனோ பேசிக்கொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு சிறுமி மாயமானார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமி வைத்திருந்த செல்போன் எண் தொடர்புகளை கொண்டு அந்த சிறுமி திருப்பூரில் இருப்பதை கண்டறிந்து அங்கு சென்றனர்.
கைது
அங்கு திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 29) என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் சிறுமியை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story