வேலூர் மாவட்டத்துக்கு 15 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்து வருகை
15 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்து வருகை
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 3-வது அலை பரவலை தடுக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
அதைத்தவிர தடுப்பூசிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்துக்கு 15 ஆயிரம் கோவிஷீல்டு மருந்துகள் வந்தன. அவை வேலூர் அண்ணாசாலையில் உள்ள மாவட்ட மருந்து வளாகத்தில் குளிர்சாதன கிடங்கில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story