சுதந்திர தினவிழாவையொட்டி நெல்லையில் ஆரோக்கிய ஓட்டம்


சுதந்திர தினவிழாவையொட்டி நெல்லையில் ஆரோக்கிய ஓட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2021 11:48 PM IST (Updated: 13 Aug 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினவிழாவையொட்டி நெல்லையில் ஆரோக்கிய ஓட்டம் நடந்தது.

நெல்லை:
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, நெல்லை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில், 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நெல்லையில் ஆரோக்கிய ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது. நெல்லை வ.உ.சி. மணிமண்டபம் அருகே மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் கொடியசைத்து ஆரோக்கிய ஓட்டத்தை தொடங்கி வைத்தார். நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் சுசில் பரசுராம்பட் முன்னிலை வகித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஏராளமான இளைஞர்கள், மாணவ-மாணவிகள் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர். வ.உ.சி மணிமண்டபம் அருகில் இருந்து ஓடத்தொடங்கிய அவர்கள் நெல்லை டவுன் ரத வீதிகள் வழியாக சுற்றி மீண்டும் மாநகராட்சிக்கு வந்து ஓட்டத்தை நிறைவு செய்தனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Next Story