தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்ட செயலாளர் ஞான பாலசிங் தலைமை தாங்கினார். கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு இலக்கு என்ற பெயரில் நடக்கும் அதிகார அத்துமீறலை நிறுத்த வேண்டும், கிராமப்புற ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க கூடாது, கொரோனா காலத்தில் கணக்கெடுப்பை நடத்தி ஜி.டி.எஸ். ஊதியத்தை குறைக்கும் போக்கினை கைவிட வேண்டும், புதிய ஊழியர்களுக்கு தாமதமின்றி நிரந்தர பணி ஆணை வழங்கி அவர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும், இட மாறுதல்களை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் ஜேக்கப், நடராஜன், முத்தையா, ஐயப்பன், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story