லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
களியக்காவிளை:
களியக்காவிளையில் சப்- இன்ஸ்பெக்டர் சிந்தாமணி தலைமையில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது 10 டன் ரேஷன் அரிசி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசியை நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து லாரியுடன் அரிசியை பறிமுதல் செய்து லாரி டிரைவர் கும்பகோணத்தை சேர்ந்த ஸ்ரீநிவாசன் (வயது 52) என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்த அரிசியை காப்புக்காடு குடோனிலும், லாரியை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story