தி.மு.க.வினர் துண்டுபிரசுரம் வினியோகம்
பாவூர்சத்திரத்தில் தி.மு.க.வினர் துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர்.
பாவூர்சத்திரம்:
மருத்துவ கல்வியில் அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு நடவடிக்கை மேற்கொண்ட தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில், பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தார். மாநில மாணவரணி துணை செயலாளர் எம்.ஏ.எம்.ஷெரீப், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் க.சீனித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story