லஞ்சம் வாங்கியதாக கரூர் மாவட்ட பதிவாளர் மீது வழக்கு
லஞ்சம் வாங்கியதாக கரூர் மாவட்ட பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கரூர்
ரகசிய தகவல்
கரூர் மாவட்ட பத்திரப்பதிவுத்துறை மாவட்ட பதிவாளராக (நிர்வாகம்) பணிபுரிந்து வருபவர் பாஸ்கரன் (வயது 56). இவர் ஆய்வுக்கு செல்லும்போது லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் தலைமையிலான போலீசார், நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் உப்பிடமங்கலத்தில் இருந்து ரெங்கபாளையம் செல்லும் சாலையில் பாஸ்கரன் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
மாவட்ட பதிவாளர் மீது வழக்கு
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சந்திரசேகரன் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது பாஸ்கரன் மற்றும் சந்திரசேகரன் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.48 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர், கரூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பாஸ்கரன் மற்றும் சந்திரசேகரனை அழைத்து வந்து சோதனை நடத்தினர். இதையடுத்து, லஞ்சம் வாங்கியதாக பாஸ்கரன் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் சந்திரசேகரன் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story