மோட்டார் சைக்கிள் மோதி ஒன்றிய குழு உறுப்பினர் உள்பட 2 பேர் காயம்


மோட்டார் சைக்கிள் மோதி ஒன்றிய குழு உறுப்பினர் உள்பட 2 பேர் காயம்
x
தினத்தந்தி 14 Aug 2021 12:57 AM IST (Updated: 14 Aug 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மோதி ஒன்றிய குழு உறுப்பினர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). இவர் குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று முருகேசன், நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி பகுதியை சேர்ந்த குளித்தலை ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சிவக்குமார் (45) என்பவருடன் கோட்டைமேடு- சீகம்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
குளித்தலை அருகே உள்ள கண்டியூர் சுடுகாடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், இவரது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் முருகேசனும், சிவக்குமாரும் காயமடைந்தனர். பின்னர் இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக திருச்சி மாவட்டம் முசிறி உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story